Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.
 இப்பயிற்சி நெறிகளைப் பயில விரும்புவோர், தமது விண்ணப்பங்களை ‘பொறுப்பதிகாரி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற்பயிற்சி நிலையம், வலந்தலைச் சந்தி, காரைநகர்’ என்ற முகவரிக்கு தமது சுயவிபர விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு நிலையப் பொறுப்பதிகாரி வே.ஸ்ரீகுகன் அறிவித்துள்ளார்.
 இப்பயிற்சியில் சித்தியடைந்தோருக்கு, தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்நிலையத்திற்கான இலவச அரச பஸ் சேவை 782 காரைநகர் வழித்தடமூடாக நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்

By

Related Post