Breaking
Fri. Dec 5th, 2025
யக்கல, அளுத்கமப் பகுதியில் பஸ்ஸும் வானும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்த வானும், கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post