Breaking
Fri. Dec 5th, 2025

-ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு –

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது, திறைச்சேரியில் அனுமதி பெற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் அண்மையில் ரஷ்யாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தனர்.

இதற்காக கோடிக்கணக்கான நிதி விரயம் செய்யப்படவிருந்தது. இந்த நிலையில் குறித்த பயணம் ஜனாதிபதியினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே திறைசேரியின் அனுமதிக்கான உத்தரவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளார்.

By

Related Post