Breaking
Fri. Dec 5th, 2025

பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வாயிற் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று(16) அதிகாலை பொருட்களை கொண்டு வந்த லொறிகளும், மீன்கள் கொண்டுவந்த லொறிகளும் சந்தையின் உட்பகுதிக்குள் உள்நுழைய முடியாத நிலை காணப்படுவதாக பேலியகொடை மீன் சந்தை சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமஆராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வெள்ள நிலைமை காரணமாக மத்திய மீன் சந்தைப் பகுதியின் உள்நுழையும் பகுதியில் ஒன்றரை அடி உயரத்திற்கு வெள்ளநீர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post