Breaking
Sat. Dec 6th, 2025

மிகப்பெரிய நகரங்களில் குடியிருப்பு வீடுகளில், வீட்டு பால்கனியில் துணிகளை சலவை செய்து உலர்த்துவதற்காக தொங்க விட்டு இருப்பது வாடிக்கை. ஆனால் அமீரகம் ஷார்ஜாவில் இவ்வாறு துணிகளை சலவை கடைபோல் தொங்கவிடுவது நகரின் அழகு மற்றும் தூய்மை பாதிக்கின்றது என கூறி இதற்கு தடை விதித்து உள்ளது. இவ்வாறு தொங்கவிடப்படும் வீடுகளூக்கு 500 திராம் அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளது.

தரற்போது இதையும் மீறி ஷார்ஜா நகரில் பால்கனிகளில் துணிகள் உலர்த்தப்படுகின்றன. அவ்வாறு பால்கனியில் துணிகள் உலர்த்தும் வீடுகளூக்கு அபராதம் போடப்பட்டு உள்ளது. இவ்வாறு 6,500 வீடுகளுக்கு அபராதம் போடப்பட்டு இரண்டாவது அரையாண்டில் மட்டும் 32.5 லட்சம் திர்ஹம் ( இந்திய மதிப்பில் சுமார் ₹ 5.63 கோடி ) அபாரதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சிறப்பு பிரிவு இயக்குனர் பைசல் அல் முல்லா கூறும் போது, நகராட்சி சார்பில் பால்கனியில் துணிகளை தொங்கவிடுவதால் நகரின் அழகு மற்றும் தூய்மை பாதிகிகபடுவதாக பிரச்சாரங்கள் செய்யபடுகிற்து. மேலும் அடிக்கடி ஆய்வுகளும் நடத்தப்படுகிறது.

ஐக்கிய அரபு நாட்டில் உங்கள் வீடுகளில் பால்கனியில் கூடுதலாக பொருட்களை வைக்க சட்டம் அனுமதிப்பது இல்லை. இது அபராதத்துக்கு உள்ளாகும். பால்கனியில் டிஷ் ஆண்டனா வைப்பது மற்றும் துணியை உலர்த்த தொங்கவிடுவது கூடாது.மேலும் டேபிள், சேர்கள் போடுவது, அல்லது செடிகள் மற்றும் பானைகள் மூலம் செடி வளர்ப்பதும் கூடாது.இதற்கு 500 திராம் அபராதம் விதிக்கப்படும் பொருட்களும் பறிமுதல் செய்யபடும். சூரிய ஒளியை தடுக்க திரைகள் போடலாம் ஆனால் அதை மற்ற உபயோகத்திற்கு பயன்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்

Related Post