Breaking
Fri. Dec 5th, 2025

சனாஸ்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அங்கு ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப் வண்டி ஊழியரொருவரின் காலில் ஏறியுள்ளது.இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வண்டிமீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதன்பின்னரே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.காலில் காயபட்ட ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துறைமுகத்தில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளை தடுப்பதற்காக, ஊழியர்கள் தங்களுடைய பைகளைக் கூட கொண்டு செல்லவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….!!!

Related Post