சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த வருடம் காலமான, மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது.

டொக்டர் அஜித் தென்னகோன், டொக்டர் குமுதினி ரணதுங்க, டொக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டொக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரே ஏனைய உறுப்பினர்களாவர்.