15 வீத வற் வரி அதிகரிப்பு அமுல்

– எஸ்.வினோத் –

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியான வற் வரி இன்று இரண்டாம் திகதி  திங்கட்கிழமை  முதல் நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

 அதன் பிரகாரம் இது வரைக்காலமும் அறவிடப்பட்டு வந்த  11 சதவீதமான பெறுமதி சேர் வரி   இன்று முதல் 15 சதவீதமாக நடைமுறைப்படுத்தப்படும்  என்று   நிதியமைச்சு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதுவரை பெறுமதி சேர் வரிக்கு உள்ளடக்கப்படாத மின்சார  கட்டணத்திற்கு எதிர்வரும் காலத்திலும் இவ்வரி உள்ளடக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.