Breaking
Fri. Dec 5th, 2025

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் 20 பேரின் வெட்புரிமையை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று செவ்வாய் இரவு நடைபெற்ற விஷேட சந்திப்பில் இந்த முடிவுகள் எடுக்கபட்டதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக இவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பி.க்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, மஹிந்தானந்த அலுத்கமகே, சஜின் வாஸ், வசந்த பெரேரா, ரோஹித அபேகுணவர்தன உட்பட்ட எட்டு பேருக்கு இம்முறை வேட்புரிமை தடை செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மகிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் கூதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதானால் ஹம்பாந்தோட்டையிலேயே போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதியால் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Related Post