Breaking
Fri. Dec 5th, 2025

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கல்லடிவெலி வாவி மற்றும் அதனே சூழவுள்ள விவசாய நிலப்பகுதிகளை இன்று (07.11.2016)பார்வையிட்டார்.

இதன் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தொடர்ச்சியாக நீர்ப்பாசன நடவடிக்கையினை மேற்கொள்வதற்கும் மேட்டு நில பயிர்செய்கையாளரின் நீண்ட நாள் தேவையினை நிவர்த்திக்கும் முகமாக நீர்ப்பாசன வாய்க்காலினை புனர்நிர்மான பணிகளை செய்வதற்கான திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

நீர்பாசன வசதியினை மேம்படுத்துவதன் மூலம் இப்பிரதேச விவசாயிகள் கூடிய நன்மை அடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

14925708_1257931767601846_1233471393769824324_n 14907242_1257930457601977_6201813786337155920_n

By

Related Post