Breaking
Fri. Dec 5th, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் 26400 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார்.

இடைப்போகத்திற்கென செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்களே நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மண்டூர் வெல்லாவெளி வாழைச்சேனை கண்டங்களில் அதிகப்படியான நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த வெள்ள நீர் இருதினங்களுக்குள் வடியா விட்டால் செய்கை பண்ணப்பட்ட அத்தனை நெல் வயல்களும் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் அனைத்து வயல் நிலங்களும் வெள்ளக்க காடாகவே காட்சி தருகின்றன.

By

Related Post