27 ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 27 ஆம் திகதி  மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் நேற்று (14) மாலை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விவசாய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலேயே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதுடன், அபிவிருத்தி விடயங்கள், மக்களது பிரச்சினைகள் தொடர்பான கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.