Breaking
Sun. Dec 7th, 2025
குவைத் கல்வி அமைச்சினால் இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக நடாத்தப்பட்ட உயர் தரப் பரீட்சையில் நான்கு இலங்கை மாணவர்கள் குவைத் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 குவைத் குர்துபா இஸ்லாமிய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களான பஸால் முஹம்மத் முளப்பர் ,  பயாஸ் முஹம்மத் மஹ்ரூப்,அஷ்ரப்  முஹம்மத் அக்ரம், ஷஸான்  முஹம்மத்   பியாஸ்  ஆகியோரே இந்த மாணவ நட்சத்திரங்களாவர்.
 அண்மையில் நடந்த 2013 / 2014 கல்வியாண்டுக்கான பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்டதாலேயே இந்த நான்கு  இலங்கை மாணவர்களுக்கும் இம்முறை குவைத் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளது.
 ஒரே தடவையில் இலங்கை  மாணவர்கள் நால்வருக்கு குவைத் பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது இதுவே முதற் தடவையாகும் .
 குவைத் உயர் கல்வி அமைச்சின் கீழ் கடந்த பல தசாப்தமாக இயங்கி வரும் இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட  இலங்கை மாணவர்கள்  சிறப்பான முறையில் சித்தி எய்து தமது கலை மானி ,முதுமானி பட்டங்களை முடித்துவிட்டு குவைத்திலும் வெளி நாடுகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர் .
இவர்களது ஒளிமயமான எதிர் காலத்துக்கு தமது நல்லாசிகளை தெரிவித்துக் கொள்வதில் குவைத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகம் பெரு மகிழ்ச்சி அடைகிறது .

Related Post