Breaking
Sun. Dec 7th, 2025
கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) வெளியாகியுள்ளன.
கிராமப்புர பாடசாலைகளுக்கான முடிவுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் www.doenets.lk எனும் இணையத்தள முகவரியினூடாக பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பிலுள்ள பாடசாலைகள் மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர வலயத்தில் அமைந்துள்ள பாடசாலை அதிபர்கள், இன்று காலை பரீட்சைகள் திணைக்களத்தில்; பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் ஐந்தாம் தரம் புலமைப்பரிசிலுக்கான வெட்டிப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.   இதன்பிரகாரம், இதன்படி யாழ்ப்பாணம் 158, மட்டக்களப்பு 158, கிளிநொச்சி 147, முல்லைத்தீவு 147, நுவரெலிய 157, கொழும்பு 159, கம்பஹா 159, களுத்துறை 159, கண்டி 159, மாத்தளை 159, காலி 159, மாத்தறை 159, ஹம்பாந்தோட்டை 155, மன்னார் 157, வவுனியா 158, அம்பாறை 158, திருகோணமலை 158, குருநாகல் 159, புத்தளம் 156, அநுரதபுரம் 155, பொலநறுவை 157, பதுளை 156, மொனராகலை 158, இரத்தினபுரி 157,கேகாலை 159 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post