71வது பிறந்த நாளைக் கொண்டாடும் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

இவரது பிறந்த நாள் நிகழ்வானது அநுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதியில் சமய வழிப்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் ஹொரகொல்லயில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் இலங்கையின் 5வது ஜனாதிபதி என்பதுடன் 1994-2005 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆட்சி செய்த முதல் பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.