சந்திரிக்கா பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்கவில்லை!- ஜனாதிபதி

சந்திரிக்கா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுநிகழ்வு இதுவாகும்.

மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டமைக்கு எதிராக சந்திரிகா கடும் விமர்சனத்தை வெளியிட்டார் என்ற செய்திக்கு மத்தியிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பதவியில் இருந்தபோது கட்சிக்குள் உள்ளக ஜனநாயகம் இருந்தது.

ஊழல்கள் இடம்பெறவில்லை. பொதுமக்களின் நிதிகளை அவர் கொள்ளையடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.