நீதிமன்றில் சரணடைந்த தேனுகவிற்கு விளக்கமறியல்

முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகம இன்று மஹியங்கனை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றில் சரணடைந்த தேனுக விதானகமவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹியங்கனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஊவா மாகாணசபை தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.