Breaking
Fri. Dec 5th, 2025

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிடைக்கும் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 01 ஆம் திகதியளவில் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க பிரதேச செயலாளர் அலுவலகங்கள் செயற்பட வேண்டுமென திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்.

புதிதாக அடையாள அட்டை பெற 10,000 பேரே விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 9,000 பேருக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விட்டன. ஏனையவை பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதால் அவற்றை சரிசெய்து மீண்டும் விண்ணப்பிக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. அடையாள அட்டைகளை புதிப்பித்து திருத்துமாறு 1,60,000 விண்ணப்பங்கள் கிடைத்தன.

1,50,000 விண்ணப்பங்கள் சரி செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மீதியான அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

-Thinakaran-

Related Post