Breaking
Sun. May 19th, 2024

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞான சார களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என களுத்துறை மாவட்டத்தில் இருந்து பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் களுத்துறையில் போட்டியிடுவார் என  பொது பல சேனாவின்  அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக ஞான சார தேரர் கண்டி அல்லது குருநாகலையில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த நிலையில் களுத்துறை மாவட்டத்தில் இருந்து பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமையை கருத்தில் கொண்டு அங்கு போட்டியிட அவர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கருப்பு புள்ளியாக  அளுத்கமை பேருவளை கலவரங்கள் இடம்பிடித்துள்ளன அளுத்கமை பேருவளை ஆகிய பிரதேசங்கள் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தது என்பது குறிபிடத்தக்கது.
இம்முறை தேர்தலில் குதிக்கும் பொதுபல சேனாவின் பொது ஜன பெரமுன பத்து முதல் பதினைந்து மாவட்டங்களில் போட்டியிட உள்ளதாகவும் ஆகக்குறைந்தது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்தாக  தெரிவிக்கபடுகிறது.mn

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *