சுசில் குழுவினர் வேட்பு மனு தாக்கல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

விமல் வீரவம்ச மற்றும் டினேஸ் குணவர்த்தன ஆகியோர் இவருடன் சென்றனர்.

நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுசில் பிரேமஜெயந்த இன்று காலை பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து திரும்பினார்.