Breaking
Fri. Dec 5th, 2025

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

விருப்பு இலக்கங்கள் மாவட்டச் செயலகங்களிலிருந்து தேர்தல் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகளால் அது பரீட்சிக்கப்பட்ட பின் தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடன் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்தார்.

இதேவேளை, மின் கம்பங்கள், மதில்கள் உள்ளிட்ட பொது இடங்களில், வாகனங்களில் தேர்தல் தொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்படக்கூடாது என்றும் தேர்தல் பிரசாரச் செயற்பாடுகளின் போது சூழல் மாசடையாமல் பாதுகாக்க ப்படுவது தொடர்பிலும் வேட்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

Related Post