ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு!

– சையது அலி பைஜி –

எனது இல்லத்தை தொழகுடியர்களுக்காகவும் தவாப் செய்யகுடியவர்களுக்காவும் சுத்தம் செய்யுங்கள் என்ற இறைவனின் ஆணைக்கு இணங்க புனித இல்லத்தின் ஒரு பகுதியாக உள்ள ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவும் அழகிய நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு மக்காவில் நடை பெற்றது.

மக்காவின் இமாம்களில் ஒருவரும் புனித தலங்களின் பராமரிப்பு குழுவின் தலைவருமான அப்துரஹ்மான் சுதைஸ் தனது கரங்களால் ஹஜருல் அஸ்வதுக்கு நறுமணம் தடவுவதைதான் படம் விளக்குகிறது.