Breaking
Sat. Dec 6th, 2025

பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் பதவி விலகியதாக சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்த பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தோல்வியடையும் என்ற கருத்து நிலவுதாகவும் இது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதில் வரவில்லை என்றும் அவர் கூறினார்.tksad

Related Post