Breaking
Sat. Dec 6th, 2025
தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் குறித்த அமைச்சுக்கு மாதத்திற்கு ஒருலட்சம் ரூபா செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சி செயலாளர்கள் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த தொகையை அமைச்சரவையினால் நிர்ணயிக்குமாறும் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முன்மொழிவிற்கே அமைச்சரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post