ஆட்சியை கைப்பற்றுவோம் : ஞானசார தேரர் முழக்கம்

பொதுத் தேர்தலில் நாம் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் பெயரை மாற்றுவோம்.சிங்கள மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவோம்.என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரும்,வேட்பாளருமான கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டின் தலைவர் மற்றும்  கட்சித் தலைவர்கள் அனைவருமே தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.அவர்களுக்குச் சிங்கள மக்களின் உரிமை குறித்து கவலைகள் இல்லை.
இந்த நிலையில் சூழ்ச்சியாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும்  என்ற ஒரே நோக்கத்திலேயே நாம் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.என்று அவர் மேலும் தெரிவித்தார்.