கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு இன்று அடிக்கல்!

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் இன்று (03) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன் முதற்கட்டமாக கடவத்தை முதல் மீரிகம வரையில் 37 கிலோமீற்றர் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதன்படி கடவத்தை, மீரிகம, பொதுஹேர குருணாகல் ஊடாக தம்புள்ளை வரையிலும் கடவத்தை மீரிகம பொத்துகேபுர ரம்புக்கன, கலகெதர ஊடாக கண்டி வரையிலும் இந்த அதிவேக பாதையில் பயணிக்கலாம்.