Breaking
Fri. Dec 5th, 2025

வத்தளை, மபோலை நகரிலுள்ள இறைச்சிக்கடை ஒன்றின் உரிமையாளரான அரபாத் எனும் முஸ்லிம் நபர் அடையாளம் தெரியாத குழுவினரால் இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மகனுடன் பள்ளிவாசலுக்கு சென்று முச்சக்கரவண்டியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையிலே அவர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
46 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் சடலம் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் வந்ததாக கூறப்படும் சிலர் குறித்த வர்த்தகரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Related Post