Breaking
Fri. Dec 5th, 2025

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தலில் வாக்களிக்க உரிய அடையாள அட்டை இல்லாதவர்கள், இன்றைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரதேசத்திற்கான கிராம சேவகர் அல்லது அருகிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தற்காலிக அடையாள அட்டைகள் மாவட்ட செயலகத்தினால் மாத்திரம் விநியோகிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post