எனது தந்தை பிரதமராவதை தடுக்கமுடியாது – நாமல்

நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அல்ல என்னை சிறைக்கு அனுப்பினாலும், எனது தந்தை இந்நாட்டின் பிரதமராவதனை தடுக்க முடியாதென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.