Breaking
Sat. Dec 6th, 2025

தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் பெரும்பான்மை உள்ள நபர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தற்போதைய ஜனாதிபதியும் கூட்டமைப்பு வெற்றிபெறும் என ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றவுடன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவார் என சுசில் தெரிவித்தார். AD

Related Post