தேர்தலில் தோற்றாலும் புதிய பதவி கிடைத்து விட்டது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சு.க.வின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க இந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.