Breaking
Sat. Dec 6th, 2025

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டுவிழா வரலாற்றில் முதல் தடவை பொலன்றுவையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட மத்திய முதலமைச்சர் பெஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகிய மூவரும் ஒரே மேடையில் சநதிக்கவுள்ளனர்.

Related Post