ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் நேற்று ஜனாதிபதியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

எட்டாவது நாடாளுமன்றின் முதல் அமர்வுகள் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி விசேட உரையொன்றினை நேற்று ஆற்றியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட இராப்போசன விருந்துபசாரம் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு இந்த விசேட விருந்துபசாரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.