ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் 64 வது மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று  பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கட்சியின் இம்முக்கிய நிகழ்வில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவர்களை இணைக்கும் முயற்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.