சஷிந்ர ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை

ஊவா மாகாண  முன்னாள் முதலமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ தற்போது விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச காணியில் நிர்மாணம் மேற்கொள்ளல் மற்றும் காணி விடயத்தில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.