Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு கட்டணம் செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரச்சார நோக்கத்திற்காக பஸ்களைப் பயன்படுத்தியமைக்காக 1425 லட்ச ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டியிருந்தது.

புதிய ஒருவர் அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதனால் வழக்கு எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தெரியாது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை அறவீடு செய்வது குறித்து வழக்குத் தொடர முன்னதாக முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும் எழுத்து மூலம் அறிவித்தேன்.
எனினும் உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Post