யானை தாக்கி இளைஞன் பலி

திருக்கோவில் – ஸ்ரீவள்ளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்ற போதே இவரை யானை தாக்கியுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.