12 ஆம் திகதி புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. பஷ்பகுமார தெரிவித்தார்.

இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றதுடன் 8 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.