எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 இலட்சம் ரூபா கொள்ளை

த்தள – யுதகனாவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து 20 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.