Breaking
Sat. Dec 6th, 2025
சிலாபம் வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்று அதே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கல்கிஸ்சை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 25 வயதான நக்ஷலா ரஷ்டீன் என்ற இளம் பெண் மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது பெற்றோர் சவூதி அரேபியாவில் வசித்து வருகின்றனர். இந்த மருத்துவர் சிலாபம் வைத்தியசாலையின் 8வது பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த போது நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். இதனையடுத்து ஏனைய மருத்துவர்கள் அடிப்படை சிகிச்சையளித்துள்ளனர்.

எனினும் உடல் நிலை மோசமானதால், வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன.

By

Related Post