ஓடையில் விழுந்த மாணவி பாத்திமா அஸ்ரா பலி

– J.M.Hafees –

கட்டுகஸ்தோட்டை – நித்தவலை பகுதியில் நேற்று மாலை வீதி ஓரமான சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் ஓடை ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் 16 வயதுடைய  பாத்திமா அஸ்ரா சகாப்தீன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.