Breaking
Fri. Dec 5th, 2025

சுகாதார துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி பொது மருத்துவமனையில் 7 மாடி கட்டடதொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

இதன்போது, கண்டி நகரிற்கு அஞ்சுறுத்தல் ஏற்படுத்தும் அதிக வாகன போக்குவரத்து நெரிசல், குப்பைகூழ பிரச்சினைகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், இரண்டு வாரங்களில் இது தொடர்பான அறிக்கையை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

By

Related Post