Breaking
Fri. Dec 5th, 2025
இம்முறை ஹஜ்ஜின்போது இலங்கை யாத்திரிகர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள முஸ்லிம் சமய கலாசார அமைச்சு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளது.

இது தொடர்பான தீர்மானங்களை எடுக்க எதிர்வரும் 22 ஆம் திகதி ஹஜ் கமிட்டி கூடவுள்ளது.

இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்துச்சென்ற சில முகவர் நிலையங்கள் வாக்குறுதி அளித்தபடி சேவைகளை வழங்காததால் ஹஜ் யாத்திரிகர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இது தொடர்பான முறைப்பாடுகளை ஆராயவே மேற்படி விசாரணைக்குழு நியமிக்கப்படவுள்ளது.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரை தலைமையாகக்கொண்டே இந்த விசாரணைக்குழு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post