Breaking
Sat. Dec 6th, 2025
யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் பலியாகிய சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை – நெல்லிக்காடு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லிக்காட்டிலுள்ள அவர்களது வீட்டை உடைத்த யானை, உறங்கிக் கொண்டிருந்த குறித்த இருவரையும் தாக்கிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதீக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

By

Related Post