Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கைத் தமிழ்ப்பின்னணியினைக் கொண்ட 27 வயதுடைய  கம்ஷாயினி குணரட்ணம் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோ மாநகரத்தின் உதவி மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோவில் ஆட்சியை மீண்டும் தொழிற்கட்சி வேறிரு கட்சிகளுடன் இணைந்து கைப்பற்றியுள்ளது.

அரசியலைத் தனது முழுநேரப் பணியாகக் கொண்ட கம்ஷாயினி குணரத்னம் ஒஸ்லோ தொழிற்கட்சியின் உதவி மேயராக  இளம் வயதிலேயே தெரிவாகியுள்ளார்.
தொழிற் கட்சியின் இளைஞர் அணியில் தலைவராக இருந்து, ஒஸ்லோவின் உதவி மேயராக பெரும் ஆதரவோடு தெரிவானார்.

ஒஸ்லோவில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் மூன்றாம் இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post