Breaking
Fri. Dec 5th, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போல் தான் செயற்படப்போவதில்லை என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

சீதுவைப் பகுதியில் நேற்று  நடைபெற்ற காணாமல் போனோரின் ஒன்றியத்தின் 25 வது ஒன்றுகூடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

 ‘1989 ஆம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற கலவரத்தின் போது கடத்தப்பட்ட சிங்கள கைதிகளைப் பாதுகாப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது.

இதன்போது ஒரு சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளராக அவர் தன்னை நிலைநிறுத்தினார். எனினும் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் அவரின் கைகளுக்கு கிடைத்ததும், காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக இருந்துள்ளார்.

எனவே தற்போது காணாமல் போனோருக்காக குரல் கொடுக்கும் நான் ஒருபோதும், மஹிந்தவைப் போல் மாறமாட்டேன்’ என்றும் கூறினார்.

By

Related Post