ரணிலிடம் அறிக்கை கையளிப்பு

கடந்த வியாழக்கிழமையன்று உயர்கணக்கியல் கற்கை நெறி மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஆரம்ப விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இந்த அறிக்கையை கையளித்துள்ளார்.

இந்தநிலையில் அறிக்கையின் அம்சங்களை கொண்டு இது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸாரின் நடவடிக்கை பிழையானது என்று கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.