சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது: நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதலீட்டு மேம்பாட்டு நிகழ்வு ஒன்றிற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் இலங்கை 5 முதல் 5.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் இந்த எதிர்வு கூறல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்த ஆண்டில் இலங்கை 6.5 முதல் 6.7 வீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை எட்டும்.

இந்த மாத நடுப்பகுதியில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் சரியான விபரங்களை புரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.