Breaking
Fri. Dec 5th, 2025
பதவி வழங்கப்படாமை குறித்து என்னை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அதிகளவில் வருந்துவதாக மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

எனது அரசியல் வாழ்க்கையில் பதவிகள் பட்டங்கள் வழங்கப்படாமை எனக்குப் பிரச்சினையில்லை. பதவி கிடைக்கவில்லை என்று மாத்தறை மாவட்ட கட்சி ஆதரவாளர்களே கவலைப்படுகின்றனர்.

2009ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நெருக்கடியான தருணத்தை எதிர்நோக்கிய காலத்தில் கட்சி உறுப்பினர்களை பாதுகாத்து பச்சைக் கொடியின் கீழ் ஆதரவாளர்களை அணி திரட்டியிருந்தேன்.

எனது இந்த தலைமைத்துவம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பதவி வழங்கினால் என்னிடமிருந்து இன்னமும் அதிகளவு பலனைப் பெற்றுக்கொள்ள முடியும் என மக்கள் கருதுகின்றார்கள். நான் கட்சியையும் கட்சி ஆதரவாளர்களையும் பாதுகாப்பேன்.

கட்சியை காட்டிக் கொடுப்பதில்லை என இரத்தத்தில் எழுதி கையொப்பமிட்டே நான் இந்த பயணத்தை தொடங்கினேன் என புத்திக்க பத்திரண மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

By

Related Post