ஜனக பண்டார தென்னகோனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனக பண்டார தென்னக்கோன் 1999ல் நடந்த கொலை சம்பவம், தொடர்பில்,  அக்டோபர் 6ம் தேதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன், இன்று நீதிமன்றில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.